கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள்

வெற்றியை  காட்டும் இருவிரல்கள்
தலை குனியும் மற்றைய விரல்கள்
விரல் நடுவில் சிகரட் 

@@@

நேராக நிமிர்ந்து நிற்கவேண்டும் 
நேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு 
கலக்கத்தோடு இருக்கும் மரம் 

@@@

கொளுத்தி எரியும் வெய்யில்
தாகம் தீர்க்கும் பாதசாரிகள் 
இளநீர் வியாபாரில் வியர்வை மழை 

@@@

தெருவின் உடல் குளிர்மையானது 
தாகத்தோடு காத்திருகிறது குடம் 
குடிநீர் வண்டி 

@@@

வாழ்க்கை நெளிவும் சுழிவும் 
ஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது 
நதிகள் 

@@@
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கே இனியவன் ஹைக்கூகள்

அரசியல் சென்ரியூ கள்