கே இனியவன் சென்ரியூ

கே இனியவன் சென்ரியூ
------------------------------------------

எல்லாமே சேர்ந்தது 
எல்லாமே சென்றது 
தர்மம் இல்லாத சொத்து

------

குழந்தையின் நிறை பதின்நான்கு 
சுமையின் நிறை பதினெட்டு 
முதுகில் புத்தகப்பை


-------

கடையில் மக்களுக்கு சீனியில்லை 
வரிசையாக கடத்துகிறது 
எறும்பு 


-------

தொடர்ந்து சுற்றுவேன் 
தலை சுற்றி விழமாட்டேன் 
மின் விசிறி


-----

வருமானவரி விலகல் 
பாவ விமோசன விலகல் 
காணிக்கை உண்டியல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிப்புயலின் போன்சாய் கவிதை விளக்கமும் கவிதைகளும்

சீர்க்கூ கவிதைகள்

கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ