இடுகைகள்

கவிப்புயல் இனியவன் ஹைக்கூக்கள்

கவி நாட்டியரசர் ஹைக்கூக்கள்

ஹைக்கூக்கள் --------------------- சில்லென்று வீசும் சிறுமழைத் தூறல் நிலத்துக்கு முத்தம் ****************** காதுகளை கௌவும் காற்றின் ஆவிகள் இசை ********************* சிந்தனை கதவை திறக்கும் சாவி அறிவு ******************** இருட்டு குடிசை விரட்டும்பேய் ஒளி ********************* உயிரின் கதவை இறுக்கும் பூட்டு. சாவு & கவி நாட்டியரசர் கே இனியவன் 

சமூக அவலக்ஹைகூக்கள்

படம்
 ---------------------------------------- சமூக அவலக்ஹைகூக்கள் கவிப்புயல் இனியவன் --------------------------------------- அருந்ததி பார்த்தவள் அருந்தி இறந்தாள் வரதட்சனை கொடுமை ^^^ வயிற்றில் சுமந்தவளால் கைகளால் சுமக்க முடியவில்லை புத்தகப்பை ^^^ வாழ்கையும் இழந்தாள் தொழிலையும் இழந்தாள் விதவை பூக்காரி ^^^ ----------------------------------- சமூக அவலம் சென்ரியூ கவிப்புயல் இனியவன் ----------------------------------- குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் டாக்டர் அறிவுரை பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது ^ நேர அட்டவனனைப்படி சிறையில் அடைக்கப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள் ^ உயிரை கொன்று அலங்கரிக்கப்படுகிறது பட்டுப்புடவை ^ நகரத்தில் கட்டண கழிப்பிடம் கட்டணமின்றி தூங்கலாம் நடைபாதை ^ பகலிரவு ஆட்டம் இரவு சூதாட்டம் பகல் கிரிகட் ஆட்டம் more_horiz on Tue Jun 13, 2017 9:05 pm by கவிப்புயல் இனியவன் ----------------------- கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள் ----------------------- மனதில் இருள் ஆடையில் வெண்மை விதவை @@@ காற்றோட்டமான ஆடை ஆடை முழுவதும் அலங்காரம் ஏழை சிறுமி @@@ உடல் முழுதும் காயம் தையல் போட்டும் மாறவில்லை கிழ

போய்சான் கவிதை

 சூரிய ஒளி படாமலும்..  வாழமுடியும் என்கிறது..  அமாவாசை  ...... அக்கினி வளர்த்து..  இறந்த உயிர்களுக்கு சாந்தி..  பட்டுப்புடவை  ..... சோற்றுப்பானை திருட்டு..  அதிர்ந்து போனான் திருடன் சோறில்லை..  விவசாயிவீடு  ..... சாப்பாடும்...  அடிக்க தண்ணீரும் வழங்கப்படுகிறது..  தேர்தல்  .... இயற்கை..  பயங்கரமானது...  பஞ்சபூதத்தாலனது  @ போய்சான் கவிதை  கவிப்புயல் இனியவன் 

கவிப்புயலின் போன்சாய் கவிதை விளக்கமும் கவிதைகளும்

போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள்.  1) ஹைக்கூவிற்கு ஒரு மரபு உண்டு. ஓரடி ஈரடி, ஈற்றடி, என்ற மரபு உண்டு. ஆனால் போன்சாய்க்கு அப்படி இல்லை. ஆனால் முடிவு திருப்பமாக அமையும்.  2) ஹைக்கூவில் நகைச்சுவையாக அமைந்தால் அது சென்றியு ஆகிவிடும். இங்கு சமூக விழிப்புணர்வு, நகைச்சுவை எல்லாம். ஒன்றாகவே கருதப்படும்.  3) ஹைக்கூவில் மொழிக்கலப்பு ஏற்பதில்லை. இங்கு அது தவறில்லை.  இவை தவிர வேறுபாடு இருப்பின் நீங்கள் கூறுங்கள் நானும் அறிய விரும்புகிறேன்.  .....  கவிஞன் நிகழ்காலத்தை படம் போட்டு காட்டுபவன். அதற்கேப்ப  தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப போன்சாய் அமைத்துள்ளேன்.  ......  1) உலகமே       வைத்தியசாலை ஆக்கியது        கொரோனா  .......  2) காற்றுக்கு என்ன வேலி       யார் சொன்னது        முகக்கவசம்  ......  3) குற்றம் செய்யாதவருக்கும்.      வ

குறட்கூ.க்கள்

குறட்கூ கவிதைகள் ............ புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள் போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது.   குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது.  கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து, முனைவர் ம. ரமேஷ் என்பவர் எழுதினார்.  ....  திருமணம் சுபமுகூர்த்தத்தில் நிறைவேறியது.  காதல் கரிநாள் ஆனது  ..... 2) உறவுகள் பறிபோனது.  காதல் வந்தது.  .... 3) நொடி மூச்சு நிலையில்லை.  காதல் நிலையானது.  ... 4) கண்ணால் காதல் வந்தது.  இதயம் நொறுங்கிப்போனது.  ... 5) நித்திரையில் சிரித்தேன்.  திட்டி எழுப்பினார் அம்மா  @ கவிப்புயல் இனியவன் 

சீர்க்கூ கவிதைகள்

கவிப்புயல் இனியவன் சீர்க்கூ கவிதைகள்  01) மரம் உயிர்களின் நுரையீரல்  02) முகில் வரைவோன் இல்லாத சித்திரங்கள்  03) வியர்வை உழைப்பாளியின் வெள்ளைக்குருதி  04) மனம் குரு இல்லாத தியானம்  05) கவிதை காதலின் தலையெழுத்து 

ஹைக்கூ கவிதை

காலைக் கடிக்கமுன் கையைபலமாகக்கடித்தது புதுச்செருப்பு @ நித்தம் போனபோதும் முகம் சுழிக்கவில்லை மணிமுள் @ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

காலைக் கடிக்கமுன் கையைபலமாகக்கடித்தது புதுச்செருப்பு @ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

சென்ரியூ - கவிஞனை

சென்ரியூ ------------- கவிஞனை காவாளியாக்கியது கமல் & கவிப்புயல் இனியவன்

சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

செயற்கை சுவாசத்தில் வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது தொட்டி மீன் @@@ ஏழை கொடுத்த மனு வரிசைப்படுத்தியிருக்கிறது சவரக்கடை @@@ நன்னீர் விஷக்கிருமியாகியது டெங்கு @@@ அறுவடை செழித்தும் வாழ்க்கை செழிக்கவில்லை விவசாயக்கடன் @@@ காட்டுக்கு ராஜா என்ன தவறு செய்தாரோ மிருக்ககாட்சி கூடத்தில் சிறை @@@ கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள் -------------------------- பணம் கருகிக்கிடக்கிறது பட்டாசு @@@ சந்தோசப்படுத்தி சந்ததியை அழிக்கிறது பட்டாசு @@@ எங்களிலும் பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள் வெடிக்காத பட்டாசு @@@ ஒவ்வொரு வீடும் ஏவுகணை மையமாகிறது ஈக்குபட்டாசு @@@ மனதுக்குள் பலவர்ணங்களுடன் வெடிக்கிறது ஏழைவீட்டில் பட்டாசு & கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

பட்டுப்போன எலும்போடு..... தெருத்தெருவாய் சுற்றுகிறது செத்துப்போன கைப்பிடி @@@ மனிதன் கால்தான் வைத்தான் நிலவுக்குள் குடும்பமே நடார்த்துகிறோம் குளத்துமீன்கள் @@@ அழுகுரல் சத்தம் துடிப்பார் யாருமில்லை பொம்மைகுழந்தை @@@ மின்சார கம்பத்தில் சந்தோசமாய் வாழுகின்றன குருவிகூடு @@@ ஆசைகள் நிறைவேறுகிறது எல்லோருடைய வாழ்க்கையிலும் கனவு @ ஹைக்கூ கவிதைகள் கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ தொடர்

பிரம்ம முகூர்த்த நேரம் ஒலித்தது ஆலயமணி ஓசை கவலையோடு கோபுர புறா & கவிப்புயல் இனியவன் ஹைக்கூ  தொடர் 

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம் -------------------------------------------------- மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்) கவிப்புயலின் ஹைக்கூக்கள்  -------------------------------------------- இட்ட முட்டை சுடுகிறது  எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்  ஏக்கத்தோடு பார்த்தது கோழி  ^^^ இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாகவோ. முதல்

இனியவன் ஹைக்கூகள், சென்ரியூ கள்

----------------------- கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள் ----------------------- மனதில் இருள் ஆடையில்  வெண்மை விதவை @@@ காற்றோட்டமான ஆடை ஆடை முழுவதும் அலங்காரம் ஏழை சிறுமி @@@ உடல் முழுதும் காயம் தையல் போட்டும் மாறவில்லை கிழிந்த ஆடை @@@ ----------------------- கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள் ----------------------- தேர் திருவிழா தேர்தல் திருவிழா திருடர்கள் ஜாக்கிரதை ^^^ பரிணாம வளர்ச்சி உண்மை அடிக்கடி தாவுகிறார் கட்சி தலைவர் ^^^ தேர்தலுக்குமுன் நியதி தேர்தலுக்கு பின் மறதி தேர்தல் வாக்குறுதி ^^^ திறந்த வீட்டுக்குள் நுழைந்தது வோட்டு கேட்டு வீட்டுக்குள் வேட்பாளர்

மாட்டிறைச்சிக்கு தடை

மரணதண்டனை ரத்து மாடுகளும் சந்தோசம் மாட்டிறைச்சிக்கு தடை ^ குழந்தை தொழில் சட்டவிரோதம் மூடை சுமக்குறது குழந்தை புத்தகப்பை ^ பழையன கழிதல் புதியன புகுதல் இலையுதிர்காலம் ^ ஹைக்கூ கவிதை ♥♥கவிப்புயல் இனியவன்♥♥