கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ --------------------------------------------------------- இறங்கும் பாதையை தடை செய்யாதீர் கூக்குரல் இட்ட பயணி பஸ்ஸின் கூரையில் ^^^ சாகசங்கள் செய்து காட்டுவோம் சன கூட்ட நெரிசலுக்குள் மோட்டார் சைக்கிள் வீரர்கள் ^^^ நன்றி மறந்தவன் தமிழன் தாங்க்ஸ் சொல்லுகிறான் ^^^ சந்தோசமாக இருப்பது எப்படி ..? தம்பதிக்கு கற்று கொடுக்கிறது தொலைக்காட்சி நிகழ்ச்சி ^^^ முகநூலில் காதல் யாரையும் காதலிக்கவில்லை பழைய காதலி ^^^ கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ & ஹைக்கூவை நகைச்சுவையாக சொல்வதே சென்றியூ
கண் வரைதல் ஓவிய போட்டி முதல் பரிசு பெற்றான் மாணவன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி @@@ தொட்டிக்குள் இலை குவிகிறது தூய்மையானது சாப்பாட்டுக்கடை ஏழை வயிறு நிரம்பியது @@@ பூமி உருண்டை அதுதான் சிறிதாக இருக்கிறது தொட்டிக்குள் மீன் @@@ வெற்றி கிடைக்குவரை கட்சி மீது விசுவாசமாய் இரு தேர்தல் ராஜ தந்திரம் @@@ வானத்தில் கருமேக கூட்டம் வெறுப்போடு பார்கிறார் நடைபாதை வியாபாரி @@@
கருத்துகள்
கருத்துரையிடுக