இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூக அவலக்ஹைகூக்கள்

படம்
 ---------------------------------------- சமூக அவலக்ஹைகூக்கள் கவிப்புயல் இனியவன் --------------------------------------- அருந்ததி பார்த்தவள் அருந்தி இறந்தாள் வரதட்சனை கொடுமை ^^^ வயிற்றில் சுமந்தவளால் கைகளால் சுமக்க முடியவில்லை புத்தகப்பை ^^^ வாழ்கையும் இழந்தாள் தொழிலையும் இழந்தாள் விதவை பூக்காரி ^^^ ----------------------------------- சமூக அவலம் சென்ரியூ கவிப்புயல் இனியவன் ----------------------------------- குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் டாக்டர் அறிவுரை பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது ^ நேர அட்டவனனைப்படி சிறையில் அடைக்கப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள் ^ உயிரை கொன்று அலங்கரிக்கப்படுகிறது பட்டுப்புடவை ^ நகரத்தில் கட்டண கழிப்பிடம் கட்டணமின்றி தூங்கலாம் நடைபாதை ^ பகலிரவு ஆட்டம் இரவு சூதாட்டம் பகல் கிரிகட் ஆட்டம் more_horiz on Tue Jun 13, 2017 9:05 pm by கவிப்புயல் இனியவன் ----------------------- கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள் ----------------------- மனதில் இருள் ஆடையில் வெண்மை விதவை @@@ காற்றோட்டமான ஆடை ஆடை முழுவதும் அலங்காரம் ஏழை சிறுமி @@@ உடல் முழுதும் காயம் தையல் போட்டும் மாறவில்லை கிழ

போய்சான் கவிதை

 சூரிய ஒளி படாமலும்..  வாழமுடியும் என்கிறது..  அமாவாசை  ...... அக்கினி வளர்த்து..  இறந்த உயிர்களுக்கு சாந்தி..  பட்டுப்புடவை  ..... சோற்றுப்பானை திருட்டு..  அதிர்ந்து போனான் திருடன் சோறில்லை..  விவசாயிவீடு  ..... சாப்பாடும்...  அடிக்க தண்ணீரும் வழங்கப்படுகிறது..  தேர்தல்  .... இயற்கை..  பயங்கரமானது...  பஞ்சபூதத்தாலனது  @ போய்சான் கவிதை  கவிப்புயல் இனியவன் 

கவிப்புயலின் போன்சாய் கவிதை விளக்கமும் கவிதைகளும்

போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள்.  1) ஹைக்கூவிற்கு ஒரு மரபு உண்டு. ஓரடி ஈரடி, ஈற்றடி, என்ற மரபு உண்டு. ஆனால் போன்சாய்க்கு அப்படி இல்லை. ஆனால் முடிவு திருப்பமாக அமையும்.  2) ஹைக்கூவில் நகைச்சுவையாக அமைந்தால் அது சென்றியு ஆகிவிடும். இங்கு சமூக விழிப்புணர்வு, நகைச்சுவை எல்லாம். ஒன்றாகவே கருதப்படும்.  3) ஹைக்கூவில் மொழிக்கலப்பு ஏற்பதில்லை. இங்கு அது தவறில்லை.  இவை தவிர வேறுபாடு இருப்பின் நீங்கள் கூறுங்கள் நானும் அறிய விரும்புகிறேன்.  .....  கவிஞன் நிகழ்காலத்தை படம் போட்டு காட்டுபவன். அதற்கேப்ப  தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப போன்சாய் அமைத்துள்ளேன்.  ......  1) உலகமே       வைத்தியசாலை ஆக்கியது        கொரோனா  .......  2) காற்றுக்கு என்ன வேலி       யார் சொன்னது        முகக்கவசம்  ......  3) குற்றம் செய்யாதவருக்கும்.      வ