முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக அவலக்ஹைகூக்கள்

 ----------------------------------------

சமூக அவலக்ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்
---------------------------------------

அருந்ததி பார்த்தவள்
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை

^^^

வயிற்றில் சுமந்தவளால்
கைகளால் சுமக்க முடியவில்லை
புத்தகப்பை

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள்
விதவை பூக்காரி

^^^
-----------------------------------
சமூக அவலம் சென்ரியூ
கவிப்புயல் இனியவன்
-----------------------------------

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்
டாக்டர் அறிவுரை
பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது

^

நேர அட்டவனனைப்படி
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
பள்ளி மாணவர்கள்

^

உயிரை கொன்று
அலங்கரிக்கப்படுகிறது
பட்டுப்புடவை

^

நகரத்தில் கட்டண கழிப்பிடம்
கட்டணமின்றி தூங்கலாம்
நடைபாதை

^

பகலிரவு ஆட்டம்
இரவு சூதாட்டம்
பகல் கிரிகட் ஆட்டம்
  கவிப்புயல் இனியவன்
  -----------------------
  கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்
  -----------------------
  மனதில் இருள்
  ஆடையில் வெண்மை
  விதவை
  @@@
  காற்றோட்டமான ஆடை
  ஆடை முழுவதும் அலங்காரம்
  ஏழை சிறுமி
  @@@
  உடல் முழுதும் காயம்
  தையல் போட்டும் மாறவில்லை
  கிழிந்த ஆடை
  @@@
  -----------------------
  கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள்
  -----------------------
  தேர் திருவிழா
  தேர்தல் திருவிழா
  திருடர்கள் ஜாக்கிரதை
  ^^^
  பரிணாம வளர்ச்சி உண்மை
  அடிக்கடி தாவுகிறார்
  கட்சி தலைவர்
  ^^^
  தேர்தலுக்குமுன் நியதி
  தேர்தலுக்கு பின் மறதி
  தேர்தல் வாக்குறுதி
  ^^^
  திறந்த வீட்டுக்குள் நுழைந்தது
  வோட்டு கேட்டு வீட்டுக்குள்
  வேட்பாளர்

  கருத்துகள்

  இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

  பட்டாசு ஹைக்கூக்கள்

  ஹைக்கூவை நகைச்சுவையாக சொல்வதே சென்றியூ

  இனியவன் ஹைக்கூகள், சென்ரியூ கள்