இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிந்தித்து சிரிக்க சென்ரியூ

நண்பர்கள் கடும் சண்டை  காயம் ஏற்படவில்லை  முகநூல் நட்பு  ^ கவிப்புயல் இனியவன்  சென்ரியூ ------ யாமிருக்க பயமேன்  கந்தன் திருவாசகம்  கோயில் வாசல் பூட்டு  ^ கவிப்புயல் இனியவன்  சென்ரியூ ------ காதலர் மனமுறிவு மணிக்கணக்கில் வாக்குவாதம்  தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி  ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ  கவிப்புயல் இனியவன் ----- சுவாமி தரிசனம்  நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர்  ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு  ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ  கவிப்புயல் இனியவன்

இனியவன் காதல் சென்ரியூ

பெண் பார்க்கும் படலம் இன்ப துன்ப அதிர்ச்சி நண்பனின் காதலி ^^^ திருமண வீட்டில் இழவு செய்தி மணப்பெண் ஓட்டம் ^^^ காதல் தோல்வி தாடி வளர்ப்பு சலூன் காரன் புலம்பல் ^^^ பொய் சொன்னால் மெய் மறக்கும் காதல் ^^^ கவிப்புயல் இனியவன் காதல் சென்ரியூ

அரசியல் சென்ரியூ கள்

அரசியல் சென்ரியூ கள் பரிணாம வளர்ச்சி உண்மை அடிக்கடி தாவுகிறார்  கட்சி தலைவர்  ^ தேர் திருவிழா  தேர்தல் திருவிழா  ஜாக்கிரதை  ^ அழையாத விருந்தாளி  தேர்தல் காலத்தில்  அரசியல் தவைவர்  ^ திறந்த வீட்டுக்குள் அது பூர்ந்ததுபோல்  வோட்டு கேட்டு வீட்டுக்குள்  வேட்பாளர்  ^ தேர்தலுக்குமுன் நியதி  தேர்தலுக்கு பின் மறதி தேர்தல் வாக்குறுதி  ^ கவிப்புயல் இனியவன்  அரசியல் சென்ரியூ 

இனியவன் சமூக அவலம் சென்ரியூ

சமூக அவல சென்ரியூ கள்  குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்  டாக்டர் அறிவுரை  பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது  ^ நேர அட்டவனனைப்படி  சிறையில் அடைக்கப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள்  ^ உயிரை கொன்று  அலங்கரிக்கப்படுகிறது  பட்டுப்புடவை  ^ நகரத்தில் கட்டண கழிப்பிடம்  கட்டணமின்றி தூங்கலாம்  நடைபாதை  ^ பகலிரவு ஆட்டம்  இரவு சூதாட்டம்  பகல் கிரிகட் ஆட்டம்  ^ கவிப்புயல் இனியவன்  சமூக அவலம்  சென்ரியூ 

சமூக அவல சென்ரியூ கள்

சமூக அவல சென்ரியூ கள்  குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்  டாக்டர் அறிவுரை  பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது  ^ நேர அட்டவனனைப்படி  சிறையில் அடைக்கப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள்  ^ உயிரை கொன்று  அலங்கரிக்கப்படுகிறது  பட்டுப்புடவை  ^ நகரத்தில் கட்டண கழிப்பிடம்  கட்டணமின்றி தூங்கலாம்  நடைபாதை  ^ பகலிரவு ஆட்டம்  இரவு சூதாட்டம்  பகல் கிரிகட் ஆட்டம்  ^ கவிப்புயல் இனியவன்  சமூக அவலம்  சென்ரியூ 

கவிப்புயல் இனியவன் சென்ரியூ

உறவினருக்கு தேனீர் இடைக்கிடையே பேச்சு விளம்பர இடைவேளை ^^^ பணம் பாதாளம் பாயும் பாதாள அறைக்குள் பணம் ^^^ பணம் பத்தும் செய்யும் கடன் கொடாதவன் கையில் பத்து ^^^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ

கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ

மேனி விரும்பும் நிறம் தலை விரும்பாத நிறம் வெள்ளை ^^^ உடலை காக்கும் உடலை காந்தும் தண்ணி(ர்) ^^^ மூடினான் இருண்டு விடும் திறந்தால் பிரகாசிக்கும் புத்தகம் ^^^ அப்பா மின்னல் அம்மா மழை குடும்பசண்டை ^^^ அம்மாவுக்கு குரங்கு அவனுக்கு தெய்வம் காதலி ^^^ கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ 

ஹைக்கூவை நகைச்சுவையாக சொல்வதே சென்றியூ

தொடர்ந்து பாடும் தொண்டைகட்டாது ரேடியோ ------ சத்தியம் கேட்டு சலித்துவிட்டார் கடவுள் குடிகாரன் ------ அடையாளம் காணவில்லை மனைவி போக்குவரத்து காவலர் ----- நவீன சுயம்பரம் நடைபெறுகிறது கல் பல் உடைக்கும் போட்டி போட்டியில் முதியவர் ----- பேரூந்து பழுதடையனும் ஏங்கிக்கொண்டிருந்த பயணிகள் காதலர்கள் &&& கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ & ஹைக்கூவை நகைச்சுவையாக சொல்வதே சென்றியூ

கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ

கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ --------------------------------------------------------- இறங்கும் பாதையை தடை செய்யாதீர் கூக்குரல் இட்ட பயணி பஸ்ஸின் கூரையில் ^^^ சாகசங்கள் செய்து காட்டுவோம் சன கூட்ட நெரிசலுக்குள் மோட்டார் சைக்கிள் வீரர்கள் ^^^ நன்றி மறந்தவன் தமிழன் தாங்க்ஸ் சொல்லுகிறான் ^^^ சந்தோசமாக இருப்பது எப்படி ..? தம்பதிக்கு கற்று கொடுக்கிறது தொலைக்காட்சி நிகழ்ச்சி ^^^ முகநூலில் காதல் யாரையும் காதலிக்கவில்லை பழைய காதலி ^^^ கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ & ஹைக்கூவை நகைச்சுவையாக சொல்வதே சென்றியூ 

கே இனியவன் சென்ரியூ

கே இனியவன் சென்ரியூ ------------------------------------------ எல்லாமே சேர்ந்தது  எல்லாமே சென்றது  தர்மம் இல்லாத சொத்து ------ குழந்தையின் நிறை பதின்நான்கு  சுமையின் நிறை பதினெட்டு  முதுகில் புத்தகப்பை ------- கடையில் மக்களுக்கு சீனியில்லை  வரிசையாக கடத்துகிறது  எறும்பு  ------- தொடர்ந்து சுற்றுவேன்  தலை சுற்றி விழமாட்டேன்  மின் விசிறி ----- வருமானவரி விலகல்  பாவ விமோசன விலகல்  காணிக்கை உண்டியல் 

கே இனியவன் ஹைபுன்

காத்திருப்பேன் அவள் வருவாள் .. பக்கத்தில் அவள் அண்ணன் ... சைக்கிளில் வருவார் .. அருகிலே செல்வேன் .. கண்ணால் கதைப்பேன் .. அவள் யாடையால் கதைப்பாள் .. அண்ணன் கிட்டவரும் போது.. என் நடை வேகமாகும் ... பாடசாலைதான் எனக்கு காதல் சாலை .. கொப்பியை பரிமாறும் போது .. கடிதமும் பரிமாறும் ... விழுந்தது கடிதம் நிலத்தில் .. கண்டார் ஆசிரியர் தந்தார் .. முதுகில் நல்ல பூசை .. நண்பர்கள் கிண்டல்  நண்பிகள் அவளை கிண்டல் .. காலம் காதலாகியது .. கல்வி கரைக்கு வந்தது .. காதலும் கரைக்கு வந்தது ... பள்ளி காதல் தொடரும்  பள்ளிவரை இல்லை  பள்ளி படலைவரை  -------- ஏண்டீ மீனாஷ்சி காலையில என்ன இருக்கு ..வேலைக்கு போகணும் எதண்டாலும்.. தாவன் திண்டுட்டு போட்டுவாரன் ..ஆமா மகராசா சாமான்களையெல்லாம் வாங்கி தருவாறு  காலையில்லை சாப்பிட சீ போ..கசுமாரம்..போய் நாலு துட்டு கொண்டுவா உனக்கு ஆக்கிப் போடுறன் ...இத்தனையும் வாங்கி காட்டினார் சுப்பு ... அன்றாடம் சாப்பாடே அவனுக்கு லடாய் தான் பணம் துட்டு இதுதான் .. காலம் ஓடியாது ..கும்பிட போன தெய்வம் குறுக்க வந்ததுபோல் ஒருநாள் அதிஷ்ட லாப  சீட்டில் பல இலசம் ரூபா விழுந்தது ...திடீர் பணக்காரன்

ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

ஒப்பாரி வீட்டிலும் அழகு  ஒன்றுகூடலிலும் அழகு  -------மலர் மாலை--------- @@@ தொண்டனுக்கு பிழைப்பு தலைவனுக்கு உழைப்பு -------தேர்தல் ----------- @@@ உடல் முழுதும் நெருப்பு த்துளை வருத்தினாலும் இன்பம் தருகிறது -------புல்லாங்குழல் ------- @@@ இன்பமென நினைத்து  இன்பத்தை இழக்கிறான்  -----குடிகாரன் ----- @@@ வானம் திரவமாய் தரும் தங்கம்  நிலம் தங்கமாய் மாற்றும் திரவம்  -----பருவ மழை ------ ஹைக்கூ கவிதை  கவிப்புயல் இனியவன்

சமுதாயஹைக்கூ கவிதை

கரும் முகில் மேகம்  புகை படம் எடுத்தது  மின்னல்  ^ ஹைக்கூ கவிதை  கவிப்புயல் இனியவன் ****** திருமணமாகாத தங்கைகள்  அவசர திருமணம் அண்ணன் வீட்டோடு மாப்பிள்ளை  ^ ஹைக்கூ கவிதை  கவிப்புயல் இனியவன் ------- விவாகரத்து உறுதி  உறவும் உறுதி  பிள்ளைகளை பார்க்கலாம்  ^ சமுதாயஹைக்கூ கவிதை  கவிப்புயல் இனியவன் ----------- வலிகள் மட்டுமல்ல  பழிகளும் நிறைந்தது  காதல்  ^ வாழ்க்கை ஹைக்கூ கவிதை  கவிப்புயல் இனியவன்

கே இனியவன் ஹைக்கூகள்

நாம் பிரிந்து வாழ்கிறோம்  இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்கள்  தண்டவாளம்  @@ எரிகிறேன்  சாம்பலாகமாடேன் மெழுகுதிரி  @@ கண்ணீர் வருகிறது  கவிதை வருகிறது  வலி  @@ பறக்கிறது பட்டமில்லை  கற்பனை  + கே இனியவன் ஹைக்கூகள்

கே இனியவன் ஹைக்கூகள்

நாம் பிரிந்து வாழ்கிறோம்  இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்கள்  தண்டவாளம்  @@ எரிகிறேன்  சாம்பலாகமாடேன் மெழுகுதிரி  @@ கண்ணீர் வருகிறது  கவிதை வருகிறது  வலி  @@ பறக்கிறது பட்டமில்லை  கற்பனை  + கே இனியவன் ஹைக்கூகள்