கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ

கவிநாட்டியரசர் இனியவன் சென்றியூ
---------------------------------------------------------

இறங்கும் பாதையை தடை செய்யாதீர்
கூக்குரல் இட்ட பயணி
பஸ்ஸின் கூரையில்

^^^

சாகசங்கள் செய்து காட்டுவோம்
சன கூட்ட நெரிசலுக்குள்
மோட்டார் சைக்கிள் வீரர்கள்

^^^

நன்றி மறந்தவன்
தமிழன்
தாங்க்ஸ் சொல்லுகிறான்

^^^

சந்தோசமாக இருப்பது எப்படி ..?
தம்பதிக்கு கற்று கொடுக்கிறது
தொலைக்காட்சி நிகழ்ச்சி

^^^

முகநூலில் காதல்
யாரையும் காதலிக்கவில்லை
பழைய காதலி

^^^
கவிநாட்டியரசர் இனியவன்
சென்றியூ
&
ஹைக்கூவை நகைச்சுவையாக சொல்வதே சென்றியூ 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பட்டாசு ஹைக்கூக்கள்

ஹைக்கூவை நகைச்சுவையாக சொல்வதே சென்றியூ

இனியவன் ஹைக்கூகள், சென்ரியூ கள்