ஒப்பாரி வீட்டிலும் அழகு ஒன்றுகூடலிலும் அழகு -------மலர் மாலை--------- @@@ தொண்டனுக்கு பிழைப்பு தலைவனுக்கு உழைப்பு -------தேர்தல் ----------- @@@ உடல் முழுதும் நெருப்பு த்துளை வருத்தினாலும் இன்பம் தருகிறது -------புல்லாங்குழல் ------- @@@ இன்பமென நினைத்து இன்பத்தை இழக்கிறான் -----குடிகாரன் ----- @@@ வானம் திரவமாய் தரும் தங்கம் நிலம் தங்கமாய் மாற்றும் திரவம் -----பருவ மழை ------ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்
கண் வரைதல் ஓவிய போட்டி முதல் பரிசு பெற்றான் மாணவன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி @@@ தொட்டிக்குள் இலை குவிகிறது தூய்மையானது சாப்பாட்டுக்கடை ஏழை வயிறு நிரம்பியது @@@ பூமி உருண்டை அதுதான் சிறிதாக இருக்கிறது தொட்டிக்குள் மீன் @@@ வெற்றி கிடைக்குவரை கட்சி மீது விசுவாசமாய் இரு தேர்தல் ராஜ தந்திரம் @@@ வானத்தில் கருமேக கூட்டம் வெறுப்போடு பார்கிறார் நடைபாதை வியாபாரி @@@
கருத்துகள்
கருத்துரையிடுக