இடுகைகள்

சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

செயற்கை சுவாசத்தில் வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது தொட்டி மீன் @@@ ஏழை கொடுத்த மனு வரிசைப்படுத்தியிருக்கிறது சவரக்கடை @@@ நன்னீர் விஷக்கிருமியாகியது டெங்கு @@@ அறுவடை செழித்தும் வாழ்க்கை செழிக்கவில்லை விவசாயக்கடன் @@@ காட்டுக்கு ராஜா என்ன தவறு செய்தாரோ மிருக்ககாட்சி கூடத்தில் சிறை @@@ கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள் -------------------------- பணம் கருகிக்கிடக்கிறது பட்டாசு @@@ சந்தோசப்படுத்தி சந்ததியை அழிக்கிறது பட்டாசு @@@ எங்களிலும் பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள் வெடிக்காத பட்டாசு @@@ ஒவ்வொரு வீடும் ஏவுகணை மையமாகிறது ஈக்குபட்டாசு @@@ மனதுக்குள் பலவர்ணங்களுடன் வெடிக்கிறது ஏழைவீட்டில் பட்டாசு & கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

பட்டுப்போன எலும்போடு..... தெருத்தெருவாய் சுற்றுகிறது செத்துப்போன கைப்பிடி @@@ மனிதன் கால்தான் வைத்தான் நிலவுக்குள் குடும்பமே நடார்த்துகிறோம் குளத்துமீன்கள் @@@ அழுகுரல் சத்தம் துடிப்பார் யாருமில்லை பொம்மைகுழந்தை @@@ மின்சார கம்பத்தில் சந்தோசமாய் வாழுகின்றன குருவிகூடு @@@ ஆசைகள் நிறைவேறுகிறது எல்லோருடைய வாழ்க்கையிலும் கனவு @ ஹைக்கூ கவிதைகள் கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ தொடர்

பிரம்ம முகூர்த்த நேரம் ஒலித்தது ஆலயமணி ஓசை கவலையோடு கோபுர புறா & கவிப்புயல் இனியவன் ஹைக்கூ  தொடர் 

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம் -------------------------------------------------- மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்) கவிப்புயலின் ஹைக்கூக்கள்  -------------------------------------------- இட்ட முட்டை சுடுகிறது  எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்  ஏக்கத்தோடு பார்த்தது கோழி  ^^^ இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாகவோ. முதல் ...

இனியவன் ஹைக்கூகள், சென்ரியூ கள்

----------------------- கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள் ----------------------- மனதில் இருள் ஆடையில்  வெண்மை விதவை @@@ காற்றோட்டமான ஆடை ஆடை முழுவதும் அலங்காரம் ஏழை சிறுமி @@@ உடல் முழுதும் காயம் தையல் போட்டும் மாறவில்லை கிழிந்த ஆடை @@@ ----------------------- கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள் ----------------------- தேர் திருவிழா தேர்தல் திருவிழா திருடர்கள் ஜாக்கிரதை ^^^ பரிணாம வளர்ச்சி உண்மை அடிக்கடி தாவுகிறார் கட்சி தலைவர் ^^^ தேர்தலுக்குமுன் நியதி தேர்தலுக்கு பின் மறதி தேர்தல் வாக்குறுதி ^^^ திறந்த வீட்டுக்குள் நுழைந்தது வோட்டு கேட்டு வீட்டுக்குள் வேட்பாளர்

மாட்டிறைச்சிக்கு தடை

மரணதண்டனை ரத்து மாடுகளும் சந்தோசம் மாட்டிறைச்சிக்கு தடை ^ குழந்தை தொழில் சட்டவிரோதம் மூடை சுமக்குறது குழந்தை புத்தகப்பை ^ பழையன கழிதல் புதியன புகுதல் இலையுதிர்காலம் ^ ஹைக்கூ கவிதை ♥♥கவிப்புயல் இனியவன்♥♥

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 05

மச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே பூசகரும் பூரண சைவம் கோயிலில் மச்ச அவதார சிலை & கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைப்பதே ஹைக்கூ ----- பண்பாடுகள் பாழாய் போகிறது கலாச்சார விழாக்களில் மக்கள் இல்லை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு & கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைப்பதே ஹைக்கூ ----- காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள்  தாயின் கையை தட்டி விட்டது குழந்தை  நிலா சோறு  & கவிப்புயல் இனியவன்  சிந்திக்க வைப்பதே ஹைக்கூ  ------ வயல் நிலங்கள் வெடித்தது  வறட்சியால் பயிர்கள் இறப்பு  வெட்டிய மரங்களின் சாபம்  & கவிப்புயல் இனியவன்  சிந்திக்க வைப்பதே ஹைக்கூ  ----- நிலத்தில் கோடுகள் வறுமை கோடானது  நீடிய வறட்சி  & கவிப்புயல் இனியவன்  சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 

கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்

மனதில் இருள் ஆடையில்  வெண்மை விதவை @@@ காற்றோட்டமான ஆடை ஆடை முழுவதும் அலங்காரம் ஏழை சிறுமி @@@ உடல் முழுதும் காயம் தையல் போட்டும் காயவில்லை கிழிந்த ஆடை @@@ கார் கதவை திறந்து சலுயூட் அடித்தான் காவலாளி இறங்கி வந்தது நாய் @@@ கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்  

சிந்தித்து சிரிக்க சென்ரியூ

நண்பர்கள் கடும் சண்டை  காயம் ஏற்படவில்லை  முகநூல் நட்பு  ^ கவிப்புயல் இனியவன்  சென்ரியூ ------ யாமிருக்க பயமேன்  கந்தன் திருவாசகம்  கோயில் வாசல் பூட்டு  ^ கவிப்புயல் இனியவன்  சென்ரியூ ------ காதலர் மனமுறிவு மணிக்கணக்கில் வாக்குவாதம்  தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி  ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ  கவிப்புயல் இனியவன் ----- சுவாமி தரிசனம்  நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர்  ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு  ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ  கவிப்புயல் இனியவன்

இனியவன் காதல் சென்ரியூ

பெண் பார்க்கும் படலம் இன்ப துன்ப அதிர்ச்சி நண்பனின் காதலி ^^^ திருமண வீட்டில் இழவு செய்தி மணப்பெண் ஓட்டம் ^^^ காதல் தோல்வி தாடி வளர்ப்பு சலூன் காரன் புலம்பல் ^^^ பொய் சொன்னால் மெய் மறக்கும் காதல் ^^^ கவிப்புயல் இனியவன் காதல் சென்ரியூ

அரசியல் சென்ரியூ கள்

அரசியல் சென்ரியூ கள் பரிணாம வளர்ச்சி உண்மை அடிக்கடி தாவுகிறார்  கட்சி தலைவர்  ^ தேர் திருவிழா  தேர்தல் திருவிழா  ஜாக்கிரதை  ^ அழையாத விருந்தாளி  தேர்தல் காலத்தில்  அரசியல் தவைவர்  ^ திறந்த வீட்டுக்குள் அது பூர்ந்ததுபோல்  வோட்டு கேட்டு வீட்டுக்குள்  வேட்பாளர்  ^ தேர்தலுக்குமுன் நியதி  தேர்தலுக்கு பின் மறதி தேர்தல் வாக்குறுதி  ^ கவிப்புயல் இனியவன்  அரசியல் சென்ரியூ 

இனியவன் சமூக அவலம் சென்ரியூ

சமூக அவல சென்ரியூ கள்  குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்  டாக்டர் அறிவுரை  பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது  ^ நேர அட்டவனனைப்படி  சிறையில் அடைக்கப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள்  ^ உயிரை கொன்று  அலங்கரிக்கப்படுகிறது  பட்டுப்புடவை  ^ நகரத்தில் கட்டண கழிப்பிடம்  கட்டணமின்றி தூங்கலாம்  நடைபாதை  ^ பகலிரவு ஆட்டம்  இரவு சூதாட்டம்  பகல் கிரிகட் ஆட்டம்  ^ கவிப்புயல் இனியவன்  சமூக அவலம்  சென்ரியூ 

சமூக அவல சென்ரியூ கள்

சமூக அவல சென்ரியூ கள்  குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்  டாக்டர் அறிவுரை  பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது  ^ நேர அட்டவனனைப்படி  சிறையில் அடைக்கப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள்  ^ உயிரை கொன்று  அலங்கரிக்கப்படுகிறது  பட்டுப்புடவை  ^ நகரத்தில் கட்டண கழிப்பிடம்  கட்டணமின்றி தூங்கலாம்  நடைபாதை  ^ பகலிரவு ஆட்டம்  இரவு சூதாட்டம்  பகல் கிரிகட் ஆட்டம்  ^ கவிப்புயல் இனியவன்  சமூக அவலம்  சென்ரியூ 

கவிப்புயல் இனியவன் சென்ரியூ

உறவினருக்கு தேனீர் இடைக்கிடையே பேச்சு விளம்பர இடைவேளை ^^^ பணம் பாதாளம் பாயும் பாதாள அறைக்குள் பணம் ^^^ பணம் பத்தும் செய்யும் கடன் கொடாதவன் கையில் பத்து ^^^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ