இனியவன் ஹைக்கூகள், சென்ரியூ கள்
 -----------------------  கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்  -----------------------   மனதில் இருள்  ஆடையில்  வெண்மை  விதவை   @@@   காற்றோட்டமான ஆடை  ஆடை முழுவதும் அலங்காரம்  ஏழை சிறுமி   @@@   உடல் முழுதும் காயம்  தையல் போட்டும் மாறவில்லை  கிழிந்த ஆடை   @@@   -----------------------  கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள்  -----------------------  தேர் திருவிழா  தேர்தல் திருவிழா  திருடர்கள் ஜாக்கிரதை   ^^^   பரிணாம வளர்ச்சி உண்மை  அடிக்கடி தாவுகிறார்  கட்சி தலைவர்   ^^^   தேர்தலுக்குமுன் நியதி  தேர்தலுக்கு பின் மறதி  தேர்தல் வாக்குறுதி   ^^^   திறந்த வீட்டுக்குள் நுழைந்தது  வோட்டு கேட்டு வீட்டுக்குள்  வேட்பாளர்