இடுகைகள்

ஜனவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 05

மச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே பூசகரும் பூரண சைவம் கோயிலில் மச்ச அவதார சிலை & கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைப்பதே ஹைக்கூ ----- பண்பாடுகள் பாழாய் போகிறது கலாச்சார விழாக்களில் மக்கள் இல்லை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு & கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைப்பதே ஹைக்கூ ----- காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள்  தாயின் கையை தட்டி விட்டது குழந்தை  நிலா சோறு  & கவிப்புயல் இனியவன்  சிந்திக்க வைப்பதே ஹைக்கூ  ------ வயல் நிலங்கள் வெடித்தது  வறட்சியால் பயிர்கள் இறப்பு  வெட்டிய மரங்களின் சாபம்  & கவிப்புயல் இனியவன்  சிந்திக்க வைப்பதே ஹைக்கூ  ----- நிலத்தில் கோடுகள் வறுமை கோடானது  நீடிய வறட்சி  & கவிப்புயல் இனியவன்  சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 

கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்

மனதில் இருள் ஆடையில்  வெண்மை விதவை @@@ காற்றோட்டமான ஆடை ஆடை முழுவதும் அலங்காரம் ஏழை சிறுமி @@@ உடல் முழுதும் காயம் தையல் போட்டும் காயவில்லை கிழிந்த ஆடை @@@ கார் கதவை திறந்து சலுயூட் அடித்தான் காவலாளி இறங்கி வந்தது நாய் @@@ கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்