கே இனியவன் ஹைபுன்

காத்திருப்பேன் அவள் வருவாள் ..
பக்கத்தில் அவள் அண்ணன் ...
சைக்கிளில் வருவார் ..
அருகிலே செல்வேன் ..
கண்ணால் கதைப்பேன் ..
அவள் யாடையால் கதைப்பாள் ..
அண்ணன் கிட்டவரும் போது..
என் நடை வேகமாகும் ...
பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..
கொப்பியை பரிமாறும் போது ..
கடிதமும் பரிமாறும் ...
விழுந்தது கடிதம் நிலத்தில் ..
கண்டார் ஆசிரியர் தந்தார் ..
முதுகில் நல்ல பூசை ..
நண்பர்கள் கிண்டல் 
நண்பிகள் அவளை கிண்டல் ..
காலம் காதலாகியது ..
கல்வி கரைக்கு வந்தது ..
காதலும் கரைக்கு வந்தது ...

பள்ளி காதல் தொடரும் 
பள்ளிவரை இல்லை 
பள்ளி படலைவரை 


--------

ஏண்டீ மீனாஷ்சி காலையில என்ன இருக்கு ..வேலைக்கு போகணும் எதண்டாலும்..
தாவன் திண்டுட்டு போட்டுவாரன் ..ஆமா மகராசா சாமான்களையெல்லாம் வாங்கி தருவாறு 
காலையில்லை சாப்பிட சீ போ..கசுமாரம்..போய் நாலு துட்டு கொண்டுவா உனக்கு ஆக்கிப் போடுறன் ...இத்தனையும் வாங்கி காட்டினார் சுப்பு ...

அன்றாடம் சாப்பாடே அவனுக்கு லடாய் தான் பணம் துட்டு இதுதான் ..
காலம் ஓடியாது ..கும்பிட போன தெய்வம் குறுக்க வந்ததுபோல் ஒருநாள் அதிஷ்ட லாப 
சீட்டில் பல இலசம் ரூபா விழுந்தது ...திடீர் பணக்காரன் ஆனார் சுப்பு ..
சந்தித்தார் பிரச்சனையை மூத்த மகள்...வீட்டோடு வந்துவிட்டாள் புருசன விட்டு 
இரண்டாவது மகள் மூத்த மகளுடன் ஒரே நாய் கடி பூனா கடி சண்ட ..
அப்பாவின் சொத்துக்கு வந்திட்டியா ..? என்று சண்ட..மற்ற பக்கத்தில் மீனாஷ்சி ..
வயதுக்கு மீறிய டாம்பீகம் ...எடுவை கதை ...

எல்லாதுன்பத்தையும் தாங்க முடியாத சுப்பு சந்நியாசம் போய்விடார் 

இல்லாவிட்டாலும் பிரச்சனை 
இருந்தாலும் பிரச்சனை 
பணம்


-----------

நாளைக்கு பரீச்சையடா சந்திரா ..இப்படி நின்னு விளையாடுறியே ..நல்லா படிச்சுட்டையோ .
இல்லையட சுந்தரா ...எங்க மாமா பிள்ளைகள் வெளியூரிலிருந்து திடீரென வந்திருக்கிறாங்க அதுதான் விளையாடுறன் 

அப்படியா நாடும் வரட்டா ...? வாடா உங்க அம்மா பேசாட்டி நல்ல விளையாடு வா சூப்பர இருக்கும் 
விளடுவம் வாடா ..
விளையாடிக்கொண்டிருக்கும் போது மாமாவின் 
மகனுக்கும் சுந்தரனுக்கும் வாக்கு வாதம் வந்து 
அடிதடியில முடிங்சுது ..அப்போது மாமாவின் மகன் சொன்னான் சந்திரா ..இவன் விளையாடினால் நான் வரமாட்டன் ..இவனை அனுப்பு ...

முடியாது மச்சி ..அவன் என் உயிர் நண்பன் ..நானும் அவனும் தான் ஒன்றா பள்ளிக்குடம் போவம் விளையாடுவம் ஒன்னாகூட சாப்பிடுவம் தூங்குவம் ...இப்படியிருக்க இன்னையோட நீ போயிடுவ ...அவன் தான் எப்பவுமோ ...
என்று சொன்னதும் மச்சி கோவித்து கொண்டு போட்ட்டான் ...

சந்திரா சொன்னதை கேட்டு ஓரக்கண்ணில் கண்ணீருடன் நின்றான் சுந்தரன் ...
டேய் என்னடா ..சின்னபில்லைமாதிரி அழுற ..
என்று கட்டிப்பிடித்தான் சந்திரன் ....

உயிருக்கு உயிர் 
அன்னைக்கு நிகர் 
நட்பு


----------
அப்புதுரைக்கு  வயது 70  சாய்மனை கதிரையில் இருந்த படி நடப்பதை அவதானிப்பதுதான் அவரின் தற்போதைய நாளாந்த பணி ......!!!
தாத்தா நான் நல்லா சைக்கிள் ஒடுறானா ..? என்ற பூட்டனின் கேள்விக்கு பதில் சொல்ல முதல் தடீரென விழுந்தான் பூட்டான் ..யாரப்பா பிள்ளையை தூக்குங்கோ பூட்டான் விழுந்திட்டான் ...!!!

தனது வலது காலை பார்த்தார் அப்புத்துரை... பெரிய தழும்பு சின்ன வயதில் மாட்டு வண்டி ஓடியபோது வண்டிளால் விழுந்த காயம் நினைவு வந்தது ...!!!

மதியம் சாப்பாட்டு நேரம் பேரன் வந்தான் வயது 18 இருக்கும் வந்தவுடன் அவன் தாய் நித்திய பூசையை ஆரம்பித்தாள் நேத்து எங்கடாபோண்ணி ஸ்கூலுக்கு போறாண்டு
விஜய் படத்துக்கு போனது தெரியாதா எனக்கு அப்பா வரட்டும் ...
அப்பாவரட்டும் ......தாத்தா சிரித்தார் 
போடா போ கைகாலை கழுவிட்டு சாப்பிடு ....!!!
தான் பொய் சொல்லி நாடகத்துக்கு போனதும் தனக்கு அடிவிழுந்ததையும் எண்ணி சிரித்தார் .....!!! தாத்தா 
அன்று தண்டனையாக இருந்தவை வேதனையாக இருந்தவை இன்று இனிமையாக இருந்தது அவருக்கு ...!!!


இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது 
முதுமை


------

டேய் கெதியா வாடா ஸ்கூல் பெல் அடிக்கபோது முதல் பாடம் கணிதமாட ...சேர் 
பொல்லாதவர் லேற்றா போனா அடிப்பாற்றா அந்த மனுஷன் பொல்லாதது என்று சொன்ன படி கோபாலும் விமலும் ஓடி வந்தனர் ...ஒருமாதிரி ஸ்கூல் பெல் அடிக்க முதல் வகுப்பறைக்குள் சென்று விட்டனர் .கணித ஆசிரியர் பெரிய தடியோடு வகுப்பிற்குள் 
வந்தார் .........

பாசங்களா ....ஹோம் வொர்க் எல்லாம் செய்தாச்சா செய்யாதவன் எழும்பு ...?
யாரும் எழும்பவில்லை அப்படி பயமும் பக்தியும் அவர்மீது ...!!! 
விமலுக்கு கிட்டே வந்து நின்றார் அவனின் உடல் நடுங்கியதை பார்த்து ஏண்டா விமல் 
நடுங்கிறாய் ...? ஹோம் வொர்க் செய்யல்லயா ...? இல்லைசார் செய்திட்டன் 
அப்பா ஏண்டா நடுங்க்கிற ...? கோபால் சொன்னான் சார் அவன் காலை சாப்பிடேள்ள 
அவங்க அப்பாவுக்கு சுகமில்லை வேலைக்கு போக இல்ல அதால சமைக்கவில்லை ..
என்று சொல்ல ..வாடா என்று அவனை கூட்டி சென்று தான் அறையில் உள்ள பாக்கில் 
தான் கொண்டுவந்த சாப்பாட்டை கொடுத்தார் ...விமல் தயக்கத்துடன் சாப்பிட அவன் தலையை தடவி தனது கடந்த காலத்தை நினைத்து பார்த்தார் .....

கடினமான மனிதர்கள் மத்தியில் தான் இரக்கமும் அதிகம் .....!!!

கண்டிப்பில் தந்தை 
அரவணைப்பில் தாய் 
ஆசான்


--------------

டேய் ..உன்பெயெரையே மறந்துட்டண்டா..தூங்கு மூஞ்சி எண்டுதான் வருது ..
உங்க அம்மா கூட அப்படிதானே கூப்பிடுவா ...!!! அதுசரி இப்ப என்ன செய்கிறாய் 
என்று சுகம் விசாரித்தா தூரத்து சொந்தமானா சுதனின் ஆன்ரி ..
நல்ல சுகம் ஆன்ரி...இப்பவெல்லாம் நான் தூங்கு மூஞ்சி இல்லை   அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழும்பிடுவன் ...வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களை சோம்பலாலும் 
நேரத்தின் முக்கியத்துவத்தை புரியாமலும்  இழந்திட்டேன் ஆன்ரி ...என்று நேரத்தை 
உணர்ந்தேனோ அன்றிலிருந்து எல்லா வெற்றியும் என்னை தேடிவந்தது வருகிறது ..
இப்போ நல்ல வேலையில் இருக்கிறேன்  ஆப்பீசில சூப்பர் மான் என்றுதான் கூப்பிடுவாங்க ...என்று சொன்னவுடன் ஆன்ரி வாயை அடைத்து விட்டா ...!!!

நேரத்தை வீணாக்குபவன் மனிதனே இல்லை 

உயிர்போல் திரும்பி வராது
பொன்னுக்கு சமன் 
நேரம் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பட்டாசு ஹைக்கூக்கள்

இனியவன் ஹைக்கூகள், சென்ரியூ கள்

சீர்க்கூ கவிதைகள்