கையும் வண்மையானவன் இதயமும் வண்மையானவன் மரவெட்டி & கவிப்புயல் இனியவன் ஹைக்கூ கவிதை @@@ குடிசை வீட்டுக்குள் பிரகாச ஒளி . கட்டணமில்லாமல் கிடைகிறது . நிலவொளி & ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் @@@ பிறந்த உடனேயே எச்சில் இலை பொறுக்கிறது தொட்டி குழந்தை & ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன் @@@ கோயில் தீர்த்த குளம் மாமிசம் உண்டவர்கள் இறங்க தடை குளத்துக்குள் மீன் & ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்
நண்பர்கள் கடும் சண்டை காயம் ஏற்படவில்லை முகநூல் நட்பு ^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ ------ யாமிருக்க பயமேன் கந்தன் திருவாசகம் கோயில் வாசல் பூட்டு ^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ ------ காதலர் மனமுறிவு மணிக்கணக்கில் வாக்குவாதம் தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ கவிப்புயல் இனியவன் ----- சுவாமி தரிசனம் நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர் ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
கருத்துரையிடுக