இடுகைகள்

அக்டோபர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

செயற்கை சுவாசத்தில் வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது தொட்டி மீன் @@@ ஏழை கொடுத்த மனு வரிசைப்படுத்தியிருக்கிறது சவரக்கடை @@@ நன்னீர் விஷக்கிருமியாகியது டெங்கு @@@ அறுவடை செழித்தும் வாழ்க்கை செழிக்கவில்லை விவசாயக்கடன் @@@ காட்டுக்கு ராஜா என்ன தவறு செய்தாரோ மிருக்ககாட்சி கூடத்தில் சிறை @@@ கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள் -------------------------- பணம் கருகிக்கிடக்கிறது பட்டாசு @@@ சந்தோசப்படுத்தி சந்ததியை அழிக்கிறது பட்டாசு @@@ எங்களிலும் பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள் வெடிக்காத பட்டாசு @@@ ஒவ்வொரு வீடும் ஏவுகணை மையமாகிறது ஈக்குபட்டாசு @@@ மனதுக்குள் பலவர்ணங்களுடன் வெடிக்கிறது ஏழைவீட்டில் பட்டாசு & கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

பட்டுப்போன எலும்போடு..... தெருத்தெருவாய் சுற்றுகிறது செத்துப்போன கைப்பிடி @@@ மனிதன் கால்தான் வைத்தான் நிலவுக்குள் குடும்பமே நடார்த்துகிறோம் குளத்துமீன்கள் @@@ அழுகுரல் சத்தம் துடிப்பார் யாருமில்லை பொம்மைகுழந்தை @@@ மின்சார கம்பத்தில் சந்தோசமாய் வாழுகின்றன குருவிகூடு @@@ ஆசைகள் நிறைவேறுகிறது எல்லோருடைய வாழ்க்கையிலும் கனவு @ ஹைக்கூ கவிதைகள் கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ தொடர்

பிரம்ம முகூர்த்த நேரம் ஒலித்தது ஆலயமணி ஓசை கவலையோடு கோபுர புறா & கவிப்புயல் இனியவன் ஹைக்கூ  தொடர் 

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம் -------------------------------------------------- மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்) கவிப்புயலின் ஹைக்கூக்கள்  -------------------------------------------- இட்ட முட்டை சுடுகிறது  எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்  ஏக்கத்தோடு பார்த்தது கோழி  ^^^ இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாகவோ. முதல்